தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா: சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

19th Oct 2022 03:15 PM

ADVERTISEMENT

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவை தாக்கல் செய்தார். 

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து ஏற்கெனவே அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்பதால் சட்டப்பேரவையில் மசோசா தாக்கல் செய்ய வேண்டும்.

இந்நிலையில் அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு 3 மாத சிறை அல்லது ரூ.5000 அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படும் என்றும், சூதாட்டத்தை நடத்துபவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 'கார்கே தலைமையில் கட்சியை மேம்படுத்துவோம்' - சசிதரூர் அறிக்கை!

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT