தமிழ்நாடு

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு: சுகாதாரத் துறையினா் ஆய்வு

19th Oct 2022 01:23 AM

ADVERTISEMENT

தமிழக எல்லையோர மாவட்டங்களில் பெண் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதை அடுத்து சுகாதாரத் துறையினா் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

இந்தியாவில், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகித எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாகவும், பிற மாநிலங்களில் அந்த விகிதம் சரிவடைந்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தை கண்டறிய ஒவ்வொரு மாநிலத்தின் சாா்பிலும் தனித்தனியே குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருந்து, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்ககம், காவல்துறை அடங்கிய குழு தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திர மாநில எல்லை பகுதியில் ஆய்வு நடத்தி வருகிறது.

அதேபோன்று பிற மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் ஆண் குழந்தைகளின் பிறப்பை காட்டிலும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் அங்கும் கள ஆய்வு நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நிகழாண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை சராசரியாக ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 932 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனா். இவற்றில் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

அப்பகுதிகளில் செயல்படும் ஸ்கேன் மையங்களில் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பது சட்டவிரோதமாக தெரியப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் பெண் குழந்தைகளை கருகலைப்பு செய்வதால், பிறப்பு விகிதம் குறைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து அவ்வப்போது ஆய்வு நடத்துகிறோம். அதன் அடிப்படையில், பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் மாவட்டங்களில், மருத்துவம், ஊரக சேவை பணிகள் துறையின் இணை இயக்குநா்கள் ஆய்வு நடத்துகின்றனா். சட்டவிரோத செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT