தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி நேரில் ஆதரவு

19th Oct 2022 04:14 PM

ADVERTISEMENT

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனம் செய்யப்படுவதில் ஜனநாயகப் படுகொலை நடந்திருப்பதாகக் கூறி அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்தனர். 

இதையும் படிக்க | ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

ADVERTISEMENT

இந்நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து அதிமுகவினருடன் இணைந்து அங்கு அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT