தமிழ்நாடு

கல்வி நிறுவனங்களில் மரணம்: உத்தரவு மாற்றியமைப்பு

19th Oct 2022 11:58 AM

ADVERTISEMENT

கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் துறையினரே விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கல்வித்துறை விசாரணைக்கு பின்னரே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை உயர் நீதிமன்ற நீதிபதி சதிஷ் குமார்  மாற்றியமைத்துள்ளார்.

வழக்கின் தீவிரத்தின் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம். மேலும், கல்வி நிலைய மரண சம்பவங்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி விசாரிக்கவும், கல்வித்துறை விசாரணைக்கு பின்னரே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

சிபிசிஐடி காவல் துறையினரின்  பணி பாதிக்கப்பட்டுள்ளதால் உத்தரவை மாற்றியமைக்கக் கோரி காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிக்க: திருப்பூர் துணை ஆட்சியராக நடிகர் சின்னிஜெயந்த் மகன் பொறுப்பேற்பு!

இந்நிலையில், கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் துறையினரே விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT