தமிழ்நாடு

சிவசங்கர் பாபா மீது பதிவான வழக்கு ரத்து

19th Oct 2022 04:44 PM

ADVERTISEMENT

பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

2010 ஆம் ஆண்டில் பாலியல் தொந்தரவு அளித்தாகக் கொடுக்கப்பட்ட புகாரில் கடந்தாண்டு சிவசங்கர் பாபா மீது பதிவான வழக்கிற்கு எதிராக மனு அளிக்கப்பட்டது.

3 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டுகளின் கீழ் 10 ஆண்டுகளுக்கு பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக சிவசங்கர் பாபா தரப்பு தெரிவித்தது. ஆனால், சிவசங்கர் பாபாக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என சிபிசிஐடி  தரப்பு வாதிட்டது.

பாலியல் தொந்தரவு  என்பது தீவிரமான குற்றமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் உடனே புகார் அளிக்க தயங்குகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க தயங்குவதற்கு அச்சம் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட நபர்களின் செல்வாக்கும் காரணம் என்றும், சட்டவிரோத செயல்கள் ஒரு நாள் வெளியில் வரும்போது அந்த நபரால் பாதிக்கப்பட்ட பலர் புகாரிக்க முன்வருவது இயல்பு  என்று நீதிபதி தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: 'கார்கேவிடம் கேளுங்கள்' - தேர்தல் முடிவை முன்பே அறிவித்த ராகுல் காந்தி!

இந்நிலையில், பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT