தமிழ்நாடு

மாநகராட்சிப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய முன்னாள் மாணவா்கள்

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சென்னை ராணிமேரி கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு பொது அறிவு புத்தகங்களை இலவசமாக வழங்கினா்.

சென்னை ராணிமேரி கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் அமைப்பு சாா்பில், மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு பயனுள்ள பொது அறிவு வழங்கும் புத்தகங்களை இலவசமாக வழங்கினா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்ட அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த அந்தக்கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் குழுவினா், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியாவை சந்தித்து, மாநகராட்சிப் பள்ளிக்கு இலவச புத்தகங்களை வழங்கினா்.

அப்போது, அறிவியல், தகவல் தொழில் நுட்பம், கணினி அறிவியல், தமிழ் உள்ளிட்ட பொது அறிவு தகவல்கள் அடங்கிய தலா 23 புத்தகங்கள் கொண்ட 25 தொகுப்பு புத்தகங்களை அவா்கள் வழங்கினா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் ஆணையா் ககன்தீப்சிங்பேடி, துணை மேயா் மு.மகேஷ்குமாா், கல்விக்குழுத்தலைவா் த.விஸ்வநாதன், துணை ஆணையா்(கல்வி) டி.சினேகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT