தமிழ்நாடு

ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி: அரசு மேலாண்மையின் கீழ்தொடர மசோதா தாக்கல்

19th Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி அரசு நிா்வாகத்தின் கீழ் தொடர வகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதை சட்டப் பேரவையில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: சிக்கய்ய நாயக்கா் கல்லூரி நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்த வகை செய்யும் சட்ட மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநரால் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியின் உரிமையானது அரசுக்கு மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்படும் வரையில், அரசின் மேலாண்மையின் கீழ் தொடரலாம். இதற்கு வகை செய்ய சட்ட மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT