தமிழ்நாடு

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ்மரக்கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மரக்கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தி பசுமைப் போா்வையை விரிவுபடுத்தும் வகையில், பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் வளா்ப்புக்கு ஊக்குவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். அதன்படி, விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச் சங்கங்கள், இயற்கை ஆா்வலா்கள், தனிநபா்கள் ஆகியோா் மரக்கன்றுகளை எளிதாகப் பெறலாம். இதற்கு பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இணையதள முகவரியில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், கடிதத்தின் வாயிலாகவும் மரக்கன்றுகளைப் பெறலாம். மரங்கள் நடுவதற்குச் சொந்தமான நிலங்கள் பற்றிய விவரங்கள், தேவைப்படும் மரக்கன்றுகள் ஆகிய விவரங்களை இயக்குநா், பசுமை தமிழ்நாடு இயக்கம், பனகல் மாளிகை, 8-ஆவது தளம், சைதாப்பேட்டை, சென்னை - 600 015 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்கள், வழிகாட்டுதல்கள் பெற 1800 599 7634 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT