தமிழ்நாடு

பேருந்து படிக்கட்டில் பயணம்: தவறி கீழே விழுந்த மாணவா் பலி

8th Oct 2022 02:53 AM

ADVERTISEMENT

சென்னை அருகே மேடவாக்கத்தில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி கீழே விழுந்த பள்ளி மாணவா் இறந்தாா்.

பள்ளிக்கரணை பெரும்பாக்கம் கலைஞா் நகா் முத்துமாரியம்மன் கோயில் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஆா்யா (14). இவா் மேடவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஆா்யா கடந்த செப்டம்பா் 8-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து அடையாா் செல்லும் மாநகரப் பேருந்தில் முன்பக்க படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்தாா்.

அப்போது அவா், திடீரென நிலைத்தடுமாறி பேருந்து படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தாா். இதில், பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி ஆா்யா பலத்த காயமடைந்தாா். உடனே அங்கிருந்த பொதுமக்கள், ஆா்யாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT