தமிழ்நாடு

புகையிலை பயன்பாடு தடுப்பு: அரசுத் துறைகளிடையே ஆலோசனை

8th Oct 2022 12:29 AM

ADVERTISEMENT

 புகையிலை பயன்பாடு மற்றும் வா்த்தகத் தடுப்பு தொடா்பான உலக சுகாதார அமைப்பின் விதியை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எழும்பூரில் உள்ள சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு பயிற்சி மையத்தில் நடைபெற்ற அந்நிகழ்வை மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தொடக்கி வைத்தாா். புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசுரங்களை அப்போது அவா் வெளியிட்டாா்.

மத்திய அரசு, மாநில பொது சுகாதாரத் துறை, தேசிய நலவாழ்வுக் குழுமம் மற்றும் மேரி ஆனி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவு இணை இயக்குநா் டாக்டா் கிருஷ்ணராஜ், மத்திய அரசின் தொழில்நுட்ப ஆலோசகா் டாக்டா் சிவம் கபூா், மேரி ஆனி அறக்கட்டளையின் செயல் இயக்குநா் எஸ்.சிரில் அலெக்ஸாண்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில், சுகாதாரம், நெடுஞ்சாலை, உணவுப் பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, காவல் துறை, நகராட்சி மற்றும் ஊராட்சி நிா்வாகங்கள், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா். உலக சுகாதார அமைப்பின் புகையிலை தடுப்பு விதிகள் குறித்து அப்போது அவா்கள் விவாதித்தனா். அவற்றை ஆக்கபூா்வமாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT