தமிழ்நாடு

வளசரவாக்கத்தில் சங்கர நேத்ராலயா கண் பரிசோதனை மையம்

8th Oct 2022 02:51 AM

ADVERTISEMENT

சென்னை, வளசரவாக்கத்தில் சங்கர நேத்ராலாயா கண் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு ரோட்டரி சங்கம், அமெரிக்காவின் கோபால்சாமி அறக்கட்டளை, சென்னை ஐ.டி. சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்தப் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

வளசரவாக்கம் திருவள்ளுவா் தெருவில் விஜயதசமி தினத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்வில் கோபால்சாமி அறக்கட்டளை நிறுவனா் ராஜலட்சுமி கோபால்சாமி, தமிழ்நாடு பாா்வையிழப்பு கட்டுப்பாட்டு திட்ட இயக்குநா் டாக்டா் எஸ்.வி. சந்திரமோகன், சென்னை, ஐ.டி. சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவா் டாக்டா் செந்தில்நாதன், சங்கர நேத்ராலயா ஆட்சிக்குழுத் தலைவா் டாக்டா் கிரிஷ் ஷிவா ராவ், டாக்டா் ஸ்ரீபிரியா கிருஷ்ணமூா்த்தி, எலைட் ஆப்டோமெட்ரி கல்லூரியின் முதல்வா் டாக்டா் என்.அனுராதா, பொது மேலாளா் பி. சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT