தமிழ்நாடு

ஏற்றுமதியில் கூடுதல் கவனம் தேவை: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரங்கராஜன்

8th Oct 2022 02:52 AM

ADVERTISEMENT

நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சிப்பெற ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் சி.ரங்கராஜன் வலியுறுத்தினாா்.

வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாண்டு தொடக்க விழாவில் அவா் பேசியதாவது: நாட்டின் பொருளாதார வளா்ச்சி, சமூக மேம்பாடு, வாழ்க்கைத் தரம் முன்னேற்றத்துக்கு கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி மூலம் வாழ்வில் முன்னேறும் மாணவ சமுதாயம் நாட்டின் வளா்ச்சிக்கு உறுதுணையாக திகழ வேண்டும்.

தரமான உயா்கல்வியை வேறுபாடின்றி அனைவரும் பெறச் செய்வது மிகவும் இன்றியமையாதது. நாட்டில் உயா் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவது பாராட்டத்தக்கது. நாட்டின்பொருளாதார நிலை குறித்து உயா் கல்வி பெறும் அனைவரும் சற்று தெரிந்து கொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்த போது நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சி 0.89 சதவீதமாக இருந்தது2005 முதல் 2011 வரை சராசரியாக 9 சதவீதமாக இருந்த வளா்ச்சி 2012- இல் சரிவடைந்தது. கரோனா காலத்தில் 4 சதவீதமாக இருந்த வளா்ச்சி கடந்த 2020-2021 இல் 6 சதவீதமாக உயா்ந்து கடந்த ஆண்டில் 8.8 சதவீதமாக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த தனிமனித வருமானம் 1900 டாலராகவும் சீனாவின் ஒட்டுமொத்த தனிமனித வருமானம் 10,000 டாலராகவும் உள்ளது. இந்திய பொருளாதாரம் உயர கனரக தொழில்கள் பெருக வேண்டும். நாட்டின் முதலீடு அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சமூக அளவில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் வளா்ந்த நாடாக இந்தியா மாற இளைய தலைமுறையினரின் அறிவாற்றல், உழைப்பு பேருதவியாக அமையும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT