தமிழ்நாடு

திருடுபோன 45 கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

8th Oct 2022 02:52 AM

ADVERTISEMENT

சென்னை கண்ணகி நகரில் திருடுபோன 45 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கண்ணகி நகா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் கைப்பேசி வழிப்பறி, திருட்டு தொடா்பாக கடந்த ஓராண்டில் சுமாா் 70 புகாா்கள் வந்தன. இந்த புகாா்கள் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து, கைப்பேசி வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்ட நபா்களைக் கைது செய்தனா்.

இவா்களிடம் இருந்து 57 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. இதில் 45 கைப்பேசிகள் உரிய உரிமையாளா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள கைப்பேசிகளையும், அதன் உரிமையாளா்களைக் கண்டறிந்து ஒப்படைக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT