தமிழ்நாடு

பரம்பிக்குளம் திட்டம்: ஆண்டுதோறும் கொண்டாடப்படும்

7th Oct 2022 04:41 PM

ADVERTISEMENT

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக்டோபர் 7ஆம் தேதி இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், நீர்வளம் - நீர்மேலாண்மை – அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினர் பெறும் வகையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக்டோபர் -7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும்!

இதையும் படிக்க- உத்தரகாசி பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 26ஆக உயர்வு

திட்டத்தை நிறைவேற்றிய பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மூத்தோரை நினைவு கூர்வோம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்ட தின விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT