தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17-ல் கூடுகிறது

7th Oct 2022 04:44 PM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவை வரும் அக்டோபர் 17 ஆம் தேதி 10 மணி அளவில் கூடுகிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17-ல் 10 மணி அளவில் கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாள் நடத்தலாம் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். துணை நிதிநிலை அறிக்கை இக்கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.

அதிமுக விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக கொறடா அளித்த கடிதம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.

ADVERTISEMENT

பன்னீர் செல்வம், பழனிசாமி அளித்த கடிதங்கள் தொடர்பாக இரு தரப்பிடம் விளக்கம் கேட்பது ஆய்வில் உள்ளது. இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும். பன்னீர் செல்வம், பழனிசாமி இருவரும் முதல்வராக இருந்தவர்கள்; கண்ணியமாக நடந்து கொள்வார்கள்.

இதையும் படிக்க: மகளிர் ஆசியக் கோப்பை: பாகிஸ்தானிடம் இந்தியா அதிர்ச்சித் தோல்வி!

இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்ற மரபுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT