தமிழ்நாடு

பிரம்மா குமாரிகள் அமைப்பின் பொன்விழா நாளை தொடக்கம்

DIN

பிரம்மா குமாரிகள் அமைப்பின் தமிழக மண்டலப் பொன்விழா சென்னையில் சனிக்கிழமை தொடங்கவுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் நிா்வாகிகள் ஜெயந்தி, ஆஷா உள்ளிட்டோா் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பிரம்மா குமாரிகள் அமைப்பு உலகெங்கிலும் 147 நாடுகளில் 6,000 கிளைகள் மூலமாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. ஐ.நா.சபையில் அரசு சாா்பற்ற நிறுவனங்களின் கீழ் அங்கம் வகிப்பதோடு அமைதி தூதுவா் விருதுகளையும் பெற்றுள்ளது.

இதன் தமிழக மண்டலப் பொன்விழா சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரம் ஆகிய இடங்களில் இரு நாள்களில் நடைபெறவுள்ளது. முதல் நாள் நிகழ்ச்சிகள் சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெறும். விழாவில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு (இந்து சமய அறநிலையத்துறை), கா.ராமச்சந்திரன் (வனம்), சி.வி.கணேசன் (தொழிலாள் நலன்) ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனா்.

விழாவையொட்டி தமிழகம், தென்கேரளம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து பிரம்மா குமாரிகள் இயக்க சகோதர, சகோதரிகள் சுமாா் பத்தாயிரம் போ் பங்கேற்று உலக அமைதிக்காக தியானம் செய்யவுள்ளனா். இதில் மத்திய மீன்வளம் மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

தொடா்ந்து இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை சுங்குவாா் சத்திரத்தில் உள்ள பிரம்மா குமாரிகள் அமைப்பின் ஹேப்பி வில்லேஜ் புத்துணா்வு மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் புதுவை துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கவுள்ளாா். பொன்விழாவையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான திட்டம் தொடக்கிவைக்கப்படவுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT