செய்திகள்

நள்ளிரவில் சாப்பிட்டால் என்னவாகும்? - ஆய்வு சொல்வது என்ன?

7th Oct 2022 01:23 PM

ADVERTISEMENT

நள்ளிரவில் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் பருமன் என்பது இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு பிரச்னை. உடல் பருமனால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படுகின்றன. 

இந்நிலையில் நள்ளிரவில் சாப்பிடுவது குறிப்பாக இரவில் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது உடல் எடையை வேகமாக அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 

அதன்படி நள்ளிரவில் சாப்பிடுவது உடலில் ஆற்றலைக் குறைகிறது, பசியை மேலும் தூண்டுகிறது, கொழுப்புத் திசுக்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இந்த மூன்றின் விளைவாக உடல் எடை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

தாமதமாக சாப்பிடுவதால் உடலில் லெப்டின், கெர்லின் ஆகிய இரு ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதால் பசியைத் தூண்டி திசுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் எடையை அதிகரிக்கிறது. 

எனவே, இரவு தாமதமாகவோ அல்லது நள்ளிரவில் சாப்பிடுவதை குறிப்பாக நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் ஆய்வாளர்கள். 

இதையும் படிக்க | 'கண்கள் முக்கியம்' - மறந்தும் இதையெல்லாம் செஞ்சுடாதீங்க!

ADVERTISEMENT
ADVERTISEMENT