தமிழ்நாடு

21% ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

7th Oct 2022 02:16 PM

ADVERTISEMENT

 

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் 21 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ளதை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோட்டூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த கோட்டூரில், வெள்ளிக்கிழமை தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் 21 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ளதை கொள்முதல் செய்ய வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்க வேண்டும். தேவையான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க மத்திய,மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் கே.எம். அறிவுடைநம்பி, ஒன்றிய செயலர் பி. பரந்தாமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதையும் படிக்க | இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறையும்: உலக வங்கி அறிக்கை

ADVERTISEMENT

ஆர்ப்பாட்டத்தினை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வை. சிவபுண்ணியம் தொடங்கி வைத்தார். திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க. மாரிமுத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதில், சிபிஐ ஒன்றிய செயலர் எம். செந்தில்நாதன், கோட்டூர் ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை முருகேசன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் வி. விசுவநாதன், மாவட்ட துணைச் செயலர் பி. சௌந்தராஜன் சிபிஐ துணைச் செயலர் வி.பி.சந்திரமோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இ.மஞ்சுளா, விவசாயிகள் சங்க ஒன்றியப் பொருளாளர் எம்.எம்.ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT