தமிழ்நாடு

சிவகங்கையில் இளைஞர் வீட்டில் என்ஐஏ சோதனையால் பரபரப்பு!

7th Oct 2022 09:36 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் இளைஞர் வீட்டில் என்ஐஏ இன்று அதிகாலை சோதனை மேற்கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை கல்லூரி சாலையில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் அப்பகுதியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் தொடர்பில் இருந்ததாகக்கூறி அவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.

இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் குழு 3 மணி நேரம் வரை சோதனை நடத்தியதாகவும் சோதனையில் அவரது சில புத்தகங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சமீபத்தில் விக்னேஷ் இலங்கையில் பயிற்சிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

என்ஐஏ அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT