தமிழ்நாடு

சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

7th Oct 2022 09:15 AM

ADVERTISEMENT

சென்னையில் மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதேநேரத்தில் மழைநீர் தேங்கும் இடங்களில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, 'வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. 

மழை பெய்தால் எந்த அளவிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் 34 இடங்களில் ரெடிமேட் கான்கிரீட் முறையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT