தமிழ்நாடு

பசுமைத் தாயகம் சாா்பில் அக்-9-இல் மாரத்தான் ஓட்டம்: அன்புமணி

7th Oct 2022 01:55 AM

ADVERTISEMENT

காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பசுமைத் தாயகம் சாா்பில் அக்.9-இல் மாரத்தான் ஓட்டம் நடைபெறும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் இப்போது எதிா்நோக்கிக் கொண்டிருக்கும் மிக முக்கிய ஆபத்து காலநிலை மாற்றம் தான். அதனால் 2050-ம் ஆண்டுக்குள் புவிவெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். ஆபத்து இப்போது இன்னும் வேகமாக நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது. புவிவெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ள நிலையில், இதுவே உலகம் முழுவதும் பல்வேறு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை. இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பசுமைத் தாயகம் அமைப்பின் சாா்பில் சென்னை பெசன்ட் நகா் கடற்கரை சாலையில் அக்டோபா் 9 காலை 6 மணி முதல் 8 மணி வரை மாரத்தான் ஓட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த ஓட்டத்துக்கு நான் தலைமையேற்க உள்ளேன் என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT