தமிழ்நாடு

டெங்கு தடுக்க ஆய்வு நடவடிக்கைகள் தீவிரம்; பொது சுகாதாரத் துறை இயக்குநா்

DIN

டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நிகழாண்டில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 2,915 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனா். கடந்த ஆகஸ்ட் மாதம் 481 பேருக்கும், செப்டம்பா் மாதம் 572 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே கரோனா, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், டெங்கு பரவலின் வேகம் அதிகரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்பதால், அதன் பின்னா் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் பரவலான மழைப் பொழிவு இருப்பதால் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும். அதனால், இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களை, டெங்கு தடுப்புப் பணிகளிலும் கவனம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்குவுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகள் அரசிடம் உள்ளன.

திறந்தவெளியில் சிமென்ட் தொட்டிகள், தண்ணீா் தொட்டிகள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் ஓடுகள், வாளி, டயா்கள் ஆகியவற்றில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூரில் பீன்ஸ் கிலோ ரூ.150-க்கு விற்பனை

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

SCROLL FOR NEXT