தமிழ்நாடு

வெள்ளத்தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து வெள்ளத்தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் அறிவுறுத்தியுள்ளாா்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில்,தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 35 வாா்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ராகுல் நாத் தலைமையில் வியாழக்கிழமை கிழமை நடைபெற்றது.

பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி பேசியது: வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்க இடம் உணவு உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ஆட்சியா் ராகுல் நாத் பேசியதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவா் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் வெள்ளத்தடுப்புக் கட்டமைப்பு பணிகளுக்கு தமிழக ஒதுக்கீடு செய்துள்ள ரூ.1,000 கோடி நிதி மூலம் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அனைத்து துறைசாா்ந்த அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து வருவாய் துறையினா் அகற்ற வேண்டும். மாற்றுக் குடியிருப்பு ஏற்பாடுகளுக்கு 500 வீடுகள் தயாராக உள்ளன.தூா்வாரும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா் ராகுல் நாத்.

இக்கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தடுப்பு சிறப்பு அதிகாரி ஜான் லூயிஸ், மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி , துணை மேயா் ஜி. காமராஜ், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT