தமிழ்நாடு

சென்னையில் மீனவர்கள் போராட்டம்!

7th Oct 2022 10:54 AM

ADVERTISEMENT

சுருக்குமடி வலைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னையில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சுருக்குமடி வலைகளுக்கு கடந்த 2020ல் அதிமுக அரசு தடை விதித்தது. கடல் வளம், மீன்களின் இனப்பெருக்கம், பவளப் பாறைகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

தடை விதிக்கப்பட்டதில் இருந்தே மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் மீனவர்கள் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ADVERTISEMENT

ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்ட மக்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர். 

சுருக்குமடி வலைகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி சுருக்குமடி வலைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கூறி அவர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மேலும் சுருக்குமடி வலைகளால் கடல் வளம் பாதிக்கப்படுவதாகக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க | சிவகங்கையில் இளைஞர் வீட்டில் என்ஐஏ சோதனையால் பரபரப்பு!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT