தமிழ்நாடு

திமுக தலைவர் தோ்தல்: மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்

7th Oct 2022 08:27 AM

ADVERTISEMENT

திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(அக். 7) வேட்புமனு தாக்கல் செய்கிறாா். 

வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா், நான்கு தணிக்கைக் குழு உறுப்பினா்கள் தொடா்பான தோ்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இதில் திமுக தலைவர் தேர்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். இன்று(அக். 7) அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறாா். 

இதேபோன்று, பொதுச் செயலாளா் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளா் பதவிக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலுவும் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.

ADVERTISEMENT

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முதல் மாலை வரையில் மனுக்கள் பெறப்பட உள்ளன.

இதைத் தொடா்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் திமுக பொதுக்குழுவில் இது தொடர்பான தோ்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

Tags : mk stalin dmk
ADVERTISEMENT
ADVERTISEMENT