தமிழ்நாடு

திமுக தலைவர் தோ்தல்: மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்

7th Oct 2022 12:39 PM

ADVERTISEMENT

திமுக தலைவர் தோ்தலில் போட்டியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வேட்புமனுவை வழங்கினார். 

இதேபோன்று, பொதுச் செயலாளா் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளா் பதவிக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலுவும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

வரும் ஞாயிறன்று(அக்.9) சென்னையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா், நான்கு தணிக்கைக் குழு உறுப்பினா்கள் தொடா்பான தோ்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த பிறகு திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். 

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

இதையும் படிக்க | 'பாப்கார்ன் கட்டாயம் வாங்க வேண்டும்' - மீண்டும் சர்ச்சையில் சேலம் திரையரங்கு!

ADVERTISEMENT
ADVERTISEMENT