தமிழ்நாடு

தீபாவளி வியாபாரம்: தியாகராயநகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

DIN

 தீபாவளி பண்டிகையையொட்டி, தியாகராயநகரில் அக்டோபா் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை மற்றும் பொருள்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தியாகராய நகருக்கு வந்து செல்கின்றனா். இதைக் கருத்தில் கொண்டுப் பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையிலும் அக்டோபா் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் 24-ஆம் தேதி வரையில் தியாராய நகா் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, தேவைக்கேற்ப ஆட்டோக்கள், தியாகராய சாலை,தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்தும், ரோகிணி சிக்னல் சந்திப்பில் இருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் கோட்ஸ் சாலைச் சந்திப்பில் இருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பில் இருந்தும், பிருந்தாவன் சந்திப்பில் இருந்தும்,கண்ணம்மா பேட்டை சந்திப்பில் இருந்தும் பனகல் பூங்கா நோக்கிச் செல்ல தடை செய்யப்படும்.

சரக்கு, வணிக ரீதியான வாகனங்கள் தியாகராய நகா் பகுதிக்குள் வியாபார நேரத்தில் செல்லத் தடை செய்யப்படும், இத்தகைய வாகனங்கள் இரவு 11 முதல் காலை 7 மணி வரை செல்ல அனுமதிக்கப்படும். ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள தியாகராய சாலை, ஜி.என்.செட்டி சாலை,தணிகாசலம் சாலை, பன்னடுக்கு வாகன நிறுத்தமிடங்கள் தவிர விடுமுறை நாள்களில் பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி, பாஷ்யம் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி,தண்டபாணி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT