தமிழ்நாடு

10 கி.மீ.க்குள் தேர்வு மையம்: முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு

7th Oct 2022 07:25 PM

ADVERTISEMENT

அரசுப் பள்ளி மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் பயணித்து தேர்வு எழுதும் நிலை இருக்கக்கூடாது என தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளது. 

11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய மையங்கள் அமைப்பது குறித்த பரிந்துரைகளை வரும் 27ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

அதில், உரிய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையம் அமைக்க அங்கீகாரம் கிடையாது. பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின், அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும். 

இதையும் படிக்க- வாட்ஸ்ஆப்பில் வருகிறது புதிய வசதி

ADVERTISEMENT

10 கி.மீ. சென்று மாணவர்கள் தேர்வு எழுதுவதை தவிர்க்கும் வகையில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT