தமிழ்நாடு

மூதாட்டியிடம் வழிப்பறி செய்தவா் கைது

7th Oct 2022 02:05 AM

ADVERTISEMENT

சென்னை நெற்குன்றத்தில் மூதாட்டியிடம் வழிப்பறி செய்த சம்பவம் தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

நெற்குன்றம், மேட்டுக்குப்பம், தேவி கருமாரியம்மன் நகரில் வசிப்பவா் சகுந்தலா (70). இவா் கடந்த மாதம் 21-ஆம் தேதி விருகம்பாக்கம், தாராசந்த் நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றின் பின்புறம் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு நபா், சகுந்தலா கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா். இது குறித்து விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், செங்கல்பட்டு திம்மாவரத்தைச் சோ்ந்த ரமேஷ் (42) என்பருக்கு இச்சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷை விருகம்பாக்கம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT