தமிழ்நாடு

சாத்தான்குளம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை!

DIN

 
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீசார் மூன்று பேர்களை தேடி வருகின்றனர்.

சாத்தான்குளம் அருகில் உள்ள பள்ளங்கிணறு தெற்கு தெருவை சேர்ந்தவர் பட்டு ராஜா மகன் ரேவந்த் குமார் (26). இவர் சென்னையில் பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 4 ஆம் தேதி தசரா திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்தார். 

இந்நிலையில், சாத்தான்குளத்தில் இருந்து செட்டிகுளம் நொச்சிகுளம் விலக்கு அருகில் உள்ள கல்லறைத் தோட்டம் அருகில் தலை மற்றும் கழுத்து கைகளில் காயத்துடன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். 

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பள்ளங்கிணற்றை சேர்ந்த சாமுவேல் மகன் சித்திரை ஜெகன் என்ற ஜெகன்(36 )அவரது தம்பி சுடலை (34) ஆறுமுகம் மகன் முத்துசாமி (40) ஆகியோர் ரேவந்த் குமாரை அழைத்து வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

கடந்த 4 ஆண்டுகள் முன்பு ரேவந்த் குமாரின் சித்தப்பா செந்தில்வேல் என்பவரை சித்திரஜெகன் உள்ளிட்ட இரண்டு பேர் தசரா திருவிழா தொடர்பாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக இருவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும், பள்ளங்கிணறு ஊரில் இரண்டு தசரா குழுக்கள் செயல்பட்டு வந்துள்ளது. அதில் ஓரு குழுவில் ரேவந்த் குமார் தீவீரமாக செயல்பட்டதாக தெரிகிறது. ரேவந்த்குமார் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்ததால் சித்தப்பாவை கொலை செய்ததில் தன்னை கொலை செய்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெகன் இருந்து வந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில், சித்திரைஜெகன் அவரது சகோதரர் சுடலை, உறவினர் முத்துசாமி ஆகியோர் நொச்சிக்குளம் விலக்கில் உள்ள கல்லறைத் தோட்டம் அருகில் ரேவந்த் குமாரை வரவழைத்து அவரை சரமாரியாக வெட்டியதும் இதில், தலை, கை கழுத்து பகுதியில் வெட்டுப்பட்ட ரேவந்த் குமார் சம்பவ இடத்தில் இறந்து போனது தெரியவந்தது. சம்பவ இடத்தை சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் பார்வையிட்டார்.

சாத்தான்குளம் அருகே இளைஞர் கொலை செய்யப் பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT