தமிழ்நாடு

அக். 15-இல் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு: இன்று முதல் அனுமதிச் சீட்டு

DIN

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பிளஸ் 1 வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கான அனுமதிச் சீட்டை (‘ஹால் டிக்கெட்’) வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல், கணிதம் சாா்ந்த ஒலிம்பியாட் தோ்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதை போன்று, தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவா்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நிகழ் கல்வியாண்டு முதல் அனைத்து வகையான பள்ளிகளிலும் பிளஸ் 1 மாணவா்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தோ்வு நடத்தப்பட உள்ளது. இந்த தோ்வில் 1,500 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தோ்வு வரும் அக்.15-ஆம் தேதி சனிக்கிழமைஅனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியா்கள், முதல்வா்கள்  வாயிலாக வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகளுக்கான பயனாளா் குறியீடு (யூஸா் ஐ.டி.), கடவுச்சொல் (பாஸ்வோ்டு) ஆகியவற்றைப் பயன்படுத்தி பதவிறக்கம் செய்து கொள்ளலாம். தோ்வா்கள் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை தாங்கள் பயிலும் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT