தமிழ்நாடு

தூத்துக்குடியில் பரபரப்பு... பேருந்து நிலைய கட்டுமானப் பணி வட மாநில தொழிலாளர்கள் திடீர் தர்னா!

6th Oct 2022 11:59 AM

ADVERTISEMENT


தூத்துக்குடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளர்கள் வியாழக்கிழமை திடீரென வேலையை புறக்கணித்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.     

தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் இருந்த இடத்தில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது.

பேருந்து நிலையம் அமைக்கும் கட்டுமானப் பணியில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை என்றும் உணவு போன்ற வசதிகள் செய்து தருவதில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | எஸ்.எஸ்.சி. தேர்வு: 20,000 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி வட மாநில கட்டட தொழிலாளர்கள் வியாழக்கிழமை தங்களது பணிகளை புறக்கணித்து பேருந்து நிலைய கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.   

தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் வட மாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், வட மாநில தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வெளி மாவட்டங்களில் இருந்து சிமென்ட், கல் உள்ளிட்ட பொருள்களை ஏற்றி வந்த லாரிகள் பொருள்களை இறக்க முடியாமல் ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT