தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நவராத்திரி திருவிழா... 9 கோயில்களின் சப்பரங்கள் அணிவகுப்பு..!

6th Oct 2022 09:05 AM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நவராத்திரி திருவிழாவையொட்டி விழாவின் கடைசி நாளான புதன்கிழமை இரவு 9 கோயில்களில் இருந்து, வண்ண மலர்களாலும், மின்  விளக்குகளாலும், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தனர்.

கிருஷ்ணகிரியில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழாவையொட்டி சைவ மற்றும் வைணவ கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா வருவது வழக்கம். 

அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா

ADVERTISEMENT

அதன்படி, நிகழாண்டில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் கோயில்களில் நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழாவின் கடைசி நாளான புதன்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றன. 

இதில், பழையபேட்டை நரசிம்மசுவாமி கோயில் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், திருநீலகண்டர் கோயில், பழையபேட்டை சீனிவாசர் கோயில், தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், காட்டிநாயனப்பள்ளி சுப்பரமணியசுவாமி கோயில் மற்றும் கார்வேபுரம் கல்கத்தா காளிக்கோயில் உட்பட 9 கோயில்களில் இருந்து, வண்ண மலர்களாலும், மின்  விளக்குகளாலும், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா வந்தனர்.

இதையும் படிக்க | எஸ்.எஸ்.சி. தேர்வு: 20,000 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

மக்கள் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா

இரவு முழுவதும் நடந்த தேரோட்டம், கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில், வியாழக்கிழமை காலை  ஒரே இடத்தில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. அவ்வாறு அணிவகுத்து நின்ற தேர்களில் (சாப்பிரங்கள்) சிறப்பு அலங்காரத்தில் தெய்வங்கள், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

இதில் கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டனர். 

இதனைத் தொடர்ந்து அனைத்து தேர்களும் மீண்டும் தங்களது கோயிலுக்கு சென்றன. இத்துடன் கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT