தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவ விழா: 108 வீணை இசை வழிபாடு!

6th Oct 2022 09:12 AM

ADVERTISEMENT

 

உலகப்புகழ் பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவ விழாவில் விஜயதசமியை முன்னிட்டு 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் . 

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவ விழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது . 

நவராத்திரியையொட்டி சுவாமி சன்னதி 2 ஆம் பிரகாரத்தில் கொலு அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு மீனாட்சி அம்மன் தினசரி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | எஸ்.எஸ்.சி. தேர்வு: 20,000 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

இந்நிலையில், நவராத்திரி உற்சவத்தின் நிறைவு விழாவான விஜயதசமியை முன்னிட்டு வீணை வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது . 

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்திருந்த இசைகலைஞர்கள் பங்கேற்று பல்வேறு பக்தி பாடல்களை இசைத்து சரஸ்வதிக்கு வழிபாடு நடத்தினர் . 

மாணவ-மாணவியர்களின் கல்வி மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட இந்த வீணை இசை வழிபாட்டில்  பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் பங்கேற்று வீணை இசை வழிபாடு நடத்தினர். 

இசை வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் .

ADVERTISEMENT
ADVERTISEMENT