தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!

DIN

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 13,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று மாலை வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 13,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும்  மழை  தணிந்ததால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,778 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 14,818 கன அடியாகக் குறைந்தது.

மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.78  அடியாகவும் நீர் இருப்பு 91.53 டி.எம்.சியாகவும் உள்ளது.

மழையளவு 40.20 மி.மீ. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

மே மாத பலன்கள்: துலாம்

மே மாத பலன்கள்: கன்னி

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

மே மாத பலன்கள்: சிம்மம்

SCROLL FOR NEXT