தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்கள்?

6th Oct 2022 09:30 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே பரவலான மழை பெய்து வருகிறது.

இதையும் படிக்கசென்னையில் கனமழை தொடரும்: 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இந்நிலையில், வட தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அக்டோபர் 9ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT