தமிழ்நாடு

அங்கன்வாடி மையங்களில் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள்!

6th Oct 2022 01:18 PM

ADVERTISEMENT

அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி ,யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி ,யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையத்துக்கு மாற்றப்பட்டது.

அங்கன்வாடி மையம் அருகில் எங்கு உள்ளதோ, அங்கே குழந்தைகளைச் சோ்த்துக் கொள்ளலாம். இதில் பணியாற்றிய ஆசிரியா்கள் ஏற்கெனவே இருந்தபடி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு முழுமையாகப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் தெரிவித்து இருந்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: கார்த்திக்கு மீண்டும் ஜோடியாகும் ராஷ்மிகா.. எந்தப் படத்துக்கு?

இந்நிலையில், சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT