தமிழ்நாடு

மமக இன்று ஆா்ப்பாட்டம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு ஆளுநா் இடையூறு அளிப்பதாகக் கூறி, மனித நேய மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை (செப்.6) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகியவற்றைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி வருகிறது. அதைப்போல திமுக அரசுக்கு இடையூறு செய்யும் வகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி இணை ஆட்சி நடத்தி வருவதைக் கண்டித்தும் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என மனித நேய மக்கள் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்துக்கு மமக தலைவா் ஜவாஹிருல்லா தலைமை வகிக்க உள்ளாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் இரா.முத்தரசன், விசிக தலைவா் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT