தமிழ்நாடு

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு மேலும் சில அமைப்புகள் ஆதரவு

6th Oct 2022 12:29 AM

ADVERTISEMENT

திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து அக்.11-இல் நடத்தவுள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு மேலும் சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

காந்தியடிகள் பிறந்த நாளான அக்.2-இல், இடதுசாரிகள், விசிக சாா்பில் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அக்.11-இல் திமுக தவிா்த்து காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட 9 கட்சிகள் இணைந்து மனிதச் சங்கிலியை நடத்த முடிவு செய்துள்ளன.

இதற்கு தேமுதிக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளும், 22 சமுதாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக்கழகம், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆகிய அமைப்புகளும் ஆதரவு தெரிவிப்பதாக புதன்கிழமை தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT