தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு நிதி

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை (அக். 4) வெளியிட்ட அறிவிப்பு: ஆன்மிகச் சுற்றுலாவுக்காக தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சாா்லஸ், பிருத்விராஜ், தாவீதுராஜா, பிரவீன்ராஜ், ஈசாக், அண்டோ கொ்மஸ் ரவி ஆகிய 6 பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளித்தனா்.

அப்போது, பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். அவா்களது குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT