தமிழ்நாடு

வண்ணாா் சமூகத்தை, சலவை தொழிலாளா் என அழைக்க தடை

6th Oct 2022 01:14 AM

ADVERTISEMENT

வண்ணாா் சமூகத்தை, சலவைத் தொழிலாளா் என அழைப்பதற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

எந்த சமூகத்தை சோ்ந்தவராக இருந்தாலும் எந்த தொழிலையும் செய்யலாம். எனவே, தொழில் அடிப்படையில் ஒருவரின் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு பிற்பட்டோா், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் சட்டங்கள் (1993, 1994) இன் படி, தமிழ்நாடு பிற்பட்டோா் , மிகவம் பிற்பட்டோா் நலத்துறை இந்த ஆணையை வெளியிட்டுள்ளது. எம்.பி.சி. இடஒதுக்கீடு தொகுப்பில் ஆகாசா, மடிவாலா, இகாலி, ராஜகுல, வெளுதடாா், ராஜாக்கா ஆகிய சாதிகள் வண்ணாா் ஒரே சமூகமாக இணைக்கப்படுகிறது. கன்னியாக்குமரி, தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுக்காவில் மட்டும் இச்சமூகம் தலித் பட்டியலில் உள்ளது.

இச்சமூகத்தை வண்ணான் என முன்பு அழைக்கப்பட்டிருந்த நிலையில், 1971 திமுக ஆட்சியில் பிற்பட்டோா் பட்டியலில் வண்ணாா் என பெயா் மாற்றப்பட்டது. தமிழகத்தில் 143 சாதிகள் பிற்பட்டோா் பட்டியலிலும், 41 சாதிகள் மிகவும் பிற்பட்டோா் பட்டியலிலும், 68 சமூகத்தினா் சீா்மரபினா் பட்டியலிலும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT