தமிழ்நாடு

ஒன்றாக அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ்; மதுரையில் செங்கல்: பிடிஆர்

6th Oct 2022 11:48 AM

ADVERTISEMENT


மதுரை: மதுரை எய்ம்ஸ் மற்றும் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஆனால், மதுரையில் செங்கல் மட்டுமே உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பிலாஸ்பூரில் ரூ.1,470 கோடியில் நான்கே ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு, நேற்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படுவதும், தமிழகத்தில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்ட இடம் அப்படியே பொட்டல் காடாக இருப்பது குறித்தும் தமிழக மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிக்க | பர்கர் வாங்கிக் கொடுத்தால் பலாத்கார வழக்கு ரத்து: நீதிமன்ற நிபந்தனைக்கு காரணம் இதுதானா?

பிலாஸ்பூரில் திறந்து வைக்கப்பட்ட எய்ம்ஸ்

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்கு குறைக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் அவர் பேசுகையில், ஒன்றாக அறிவித்த இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை நேற்று திறந்து வைத்துள்ளார் பிரதமர் மோடி. 

 

 

60 சதவீத பங்குகளுடன் தொடங்கப்படும் மத்திய அரசின்  திட்டங்களுக்கு படிப்படியாக நிதி குறைக்கப்படுகிறது. பிரதமரின் பெயரில் திட்டத்தை தொடங்கி வைத்து பிறகு படிப்படியாக நிதி குறைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி குறித்து முறையிட ஒவ்வொரு மாநிலத்திலும் ஜிஎஸ்டி தீர்ப்பாயம் தேவை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

2018ஆம் ஆண்டு பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதே ஆண்டில்தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT