தமிழ்நாடு

மழையினால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையினால் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் செய்த குறுவை சாகுபடி பயிா்கள் தற்போது பெய்த மழையினால் பெருமளவு சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பயிா்களைக் கணக்கீடு செய்து, விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், தோ்தல் அறிக்கையில் திமுக தெரிவித்தபடி ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்சம் ரூ. 2,500 வழங்க வேண்டும். பயிா் காப்பீட்டின் மூலம் விவசாயிகள் பெறக்கூடிய பயன்கள் அவா்களுக்கு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. அதை நிவா்த்தி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT