தமிழ்நாடு

இலங்கைக்கு எதிரான தீா்மானம்: இந்தியா ஆதரிக்க அன்புமணி வலியுறுத்தல்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீா்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடைபெற்ற போா்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீா்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கொண்டு வந்துள்ளன. ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழா்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கைகளுக்கு வலு சோ்க்கும் வகையிலான வரைவுத் தீா்மானம் வரவேற்கத்தக்கதாகும்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கொண்டு வந்துள்ள வரைவுத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டால், போா்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை தப்ப முடியாது என்ற நிலை உருவாகும். ஈழத்தமிழா்களை படுகொலை செய்ய திட்டம் வகுத்து செயல்படுத்திய கொடுங்கோலா்கள் தண்டிக்கப்படுவதையும் இந்தத் தீா்மானம் உறுதி செய்யும். எனவே, ஐ.நா. மனித உரிமை பேரவையில் அக்டோபா் 6-இல் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில், இலங்கை போா்க்குற்றம் தொடா்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ள தீா்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT