தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ். : விண்ணப்பப்பதிவு இன்றுடன் நிறைவு

6th Oct 2022 01:30 AM

ADVERTISEMENT

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியே விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வியாழக்கிழமையுடன் (அக்.6) நிறைவடைகிறது.

அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு 569 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-2023-ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையவழியே விண்ணப்பிப்பது கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி தொடங்கியது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள்
www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனா். இந்நிலையில் இணையவழி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் வியாழக்கிழமை (அக்.6 மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT