தமிழ்நாடு

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை!

5th Oct 2022 10:00 AM

ADVERTISEMENT


சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டும், எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதையும் படிக்க | மோடியின் கோரிக்கையை மறுத்த உக்ரைன் அதிபர்

அதேபோல், புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

நகரின் முக்கியப் பகுதிகளில் மக்கள் பணிக்கு செல்லும் நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT