தமிழ்நாடு

விஜயதசமி... எழுத்தறிவிக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி! 

5th Oct 2022 10:31 AM

ADVERTISEMENT

 

விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதால் இன்றைய நாளில் கல்வி கலைகளை கற்கத் தொடங்குகின்றனர்.  

குழந்தைகளின் கல்வியை தொடங்கும் விதமாக வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சியில் பச்சரிசியில் ஓம் எழுதும் குழந்தை.

ADVERTISEMENT

இதன் ஓரு பகுதியாக கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் குழந்தைகளின் கல்வியை தொடங்கும் விதமாக வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சியானது நடத்தப்பட்டு வருகிறது.

கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் குழந்தைகளின் கல்வியை தொடங்கும் விதமாக வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தை.

இதையும் படிக்க | தமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்!

குழந்தைகளின் விரலை பிடித்து  ஹரி  ஸ்ரீ கணபதியே நமஹா  என எழுதியும் பச்சரியில்  ”ஓம்” என்றும் ”அம்மா” “ அப்பா” என்றும் விரல் பிடித்து குழந்தைகளை எழுத வைத்து கல்வியை விஜயதசமி நாளான புதன்கிழமை தொடங்கினர். இன்றை நாள் கல்வியை தொடங்கினால் குழந்தைகள் படிப்பில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையால் கோயிலுக்கு அழைத்து வந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர். 

விஜயதசமி நாளில் குழந்தைகளின் விரலை பிடித்து  பச்சரியில்  ”ஓம்” என்றும் ”அம்மா” “ அப்பா” என்று எழுத வைக்கின்றனர்.

இதையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து  ஐயப்பன் கோயிலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT