தமிழ்நாடு

விஜயதசமி... கிருஷ்ணகிரியில் எழுத்தறிவித்தல் விழா!

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வித்தியாரம்பம் என்னும் எழுத்தறிவித்தல் விழாவாக கொண்டாடப்பட்டது.

விஜயதசமி நாளில் தொடங்கும் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடைபெறும் என்பது நம்பிக்கை. அதன்படி. நவராத்திரி விழாவில் விஜயதசமி நாளில் கல்வி கற்கும் கலையை, பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தொடங்குவர். 

கிருஷ்ணகிரியில் உள்ள ஐயப்பன் கோவிலில் குருசாமி தேவதாஸ் தலைமையில் எழுத்தறிவித்தல் நிகழ்வு கொண்டாடப்பட்டது.  

கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர், பள்ளிக்கு முதல் முதலாக செல்ல உள்ள குழந்தைகளை இந்த நிகழ்விற்கு அழைத்து வந்திருந்தனர்.

குருசாமி தேவராஜ், கல்விக் கலையைக் கற்க உள்ள குழந்தைகளின் விரலை பிடித்து, பச்சரியில், ஓம் என எழுதி, தொடங்கி வைத்தார்.  மேலும், குழந்தைகளின் நாக்கில் தங்கத்தினாலான பொருளைக் கொண்டு, ஹரி ஓம் என எழுதினார். 

இதன் மூலம்,  குழந்தைகளின் எழுத்து, பேச்சு போன்ற திறன்கள் அதிகமாக இருக்கும் என்பது பெற்றோரின் நம்பிக்கை.  இந்த விழாவையொட்டி, கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT