தமிழ்நாடு

முடிந்தது விடுமுறை: பரனூர் சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து நெரிசல்

5th Oct 2022 06:02 PM

ADVERTISEMENT

சென்னை: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறைகள் முடிந்து ஊருக்குச் சென்றவர்கள் சென்னை திரும்பிக் கொண்டிருப்பதால், பரனூர் சுங்கச்சாவடி அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காலாண்டுத் தேர்வு விடுமுறை, வார இறுதி நாள்களுடன் சேர்ந்து ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறைகள் வந்ததால், சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பேருந்து மற்றும் வாகனங்களில் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இதையும் படிக்க.. அக்.15-க்குள் சொத்து வரி செலுத்தினால்.. சென்னை மாநகராட்சியின் செம்ம ஆஃபர்

விடுமுறை முடிந்து நாளை வழக்கம் போல அலுவலகங்கள் திறக்கும் என்பதால், ஏராளமானோர் இன்று சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இதனால் செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியிலிருந்து கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் வரையிலா சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலிருந்து புறப்பட்டவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சென்னைக்குத் திரும்பி வருவதால் இந்த போக்குவரத்து நெரிசல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை வரை நீடிக்கலாம் என்று வாகன ஓட்டிகள் கருதுகிறார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT