தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரியத் தொடங்கியது!

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 17,419 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,961 கன அடியாக சரிந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் மழை  தனிந்து வருவதால் புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,419 கன அடியிலிருந்து வினாடிக்கு 15961 கன அடியாக சரிந்துள்ளது.

புதன்கிழமை காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும்,  கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.71 அடியாகவும், நீர் இருப்பு 91.42 டிஎம்சி ஆகவும் உள்ளது.

மேட்டூர் அணையில் நீர்வரத்து சரிந்ததால் அணையின் நீர்மட்டமும் மெல்ல சரியத் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT